22,500 இருக்கைகள், 6 மணி நேர நிகழ்ச்சிக்கு தயாராகும் கலைஞர் 100 விழா மேடை

Published : Jan 05, 2024, 07:34 PM IST

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு கலைஞர் 100 விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், உச்சபட்ச திரை பிரபலங்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
22,500 இருக்கைகள், 6 மணி நேர நிகழ்ச்சிக்கு தயாராகும் கலைஞர் 100 விழா மேடை
Kalaignar 100

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு கலைஞர் 100 விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், உச்சபட்ச திரை பிரபலங்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

25
Kalaignar 100

திரை பிரபலங்களை பொருத்தவரையில் ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு பிரபலங்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

35
Kalaignar 100

இதே போன்று காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய கம்யூனஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 

45
Kalaignar 100

இது மாபெரும் விழா என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 22,500 பேருக்கு இருக்கைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாளை மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மொத்தம் ஆறு மணி நேரம் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

55
Kalaignar 100

6 மணி நேர நிகழ்ச்சியில் மொத்தமாக 40 கலை நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. கலைஞரைப் பற்றிய ஒளி - ஒலி காட்சிகளும் உள்ளன. விழாவுக்கான நுழைவு பொதுமக்களுக்கு இலவசம் என்றாலும் முதல்வர், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பதால் பாதுகாப்பு கருதி நுழைவுச் சீட்டுகள் சினிமா சங்கங்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories