கரையை கடந்த மிக்ஜாம் புயல்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்' தீவிர புயல்" தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் கடந்தது,
இதனையடுத்து 06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.12.2023 மற்றும் 08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.