கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறிடுச்சு... TVK முன்னிலைக்கு முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

Published : May 04, 2026, 03:28 PM IST

Reasons Behind TVK Lead: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையில் தேர்தலை சந்தித்த தமிழக வெற்றி கழகம் தற்போது முன்னிலையில் இருக்க என்ன காரணங்கள் என்பதை பார்ப்போம்.

PREV
17
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்:

ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் பல முக்கிய தொகுதிகளில் காலை முதலே முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் TVK அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை TVK உருவாக்க முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

27
நடிகர் விஜய்யின் செல்வாக்கு:

பொதுவாகவே திரைபிரபலங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும், விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் மிகவும் பெரிது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென்னிந்திய பகுதிகளை கடந்து, வெளிநாட்டிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரின் ரசிகர்கள் பலரும், தொண்டர்களின் ஆதரவும், நடிகர் விஜய்யை ஒரு செல்வாக்கு கொண்ட அரசியல் தலைவராக மாற்றி இன்று தமிழ்நாடு அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

37
ரசிகர் மன்றத்தின் அரசியல் கட்டமைப்பு:

விஜய்யின் ஸ்மார்ட் மூவ் தான் மற்ற அரசியல் வாதிகளை விட தமிழக கட்சி தலைவரை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. திரையுலகம் மூலம் கிடைத்த தனது ரசிகர்களின் மன்றங்களை முதலில் சமூக நலத்திட்டக் குழுக்களாக அமைத்தார். பின்னர் அவற்றை திறமையாக ஒரு அரசியல் அமைப்பாக மாற்றி, TVK என்ற கட்சியாக மாற்றினார். இந்த அமைப்பு, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தியதால், கட்சியின் வாக்கு எண்ணிக்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவே பல தொகுதிகளில் TVK கட்சியை முன்னிலை படுத்தியுள்ளது.

47
மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்:

இதற்கு முன் திமுக மற்றும் அதிமுக போன்ற இரண்டு பாரம்பரிய திராவிடக் கட்சிகள் கடந்த காலங்களில் ஆட்சி செய்திருந்தாலும், சில பகுதிகளில் நீடித்த பிரச்சனைகள் மக்களுக்கு இந்த இரு பெரு காட்சிகள் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது. அதே சமயம், TVK ஒரு புதிய, ஊழலற்ற மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்கும் என கூறப்பட்ட வாக்குறுதிகள் மாற்றத்தை விரும்ப செய்தது.

57
இளைஞர்களின் ஆதரவு:

TVK கட்சியின் மிகப்பெரிய பலம் என்றால், இளைஞர்கள் கொடுத்த ஆதரவு. இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகள், கல்வி தொடர்பான திட்டங்கள், பெரிய அளவில் திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு கை கொடுக்காமல் போனது. எனவே புதிய அரசியல் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இளைஞர்களின் ஆதரவை பெற்றது.

67
பெண் வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள்:

TVK கட்சி, மகளிருக்கு வழங்கிய வாக்குறுதிகள் பெண்களை வெருவாக கவர்ந்தது. குறிப்பாக மகளிருக்கு மாதாந்திர நிதி உதவி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், ஏழை மணப்பெண்களுக்குத் 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை போன்ற திட்டங்களை உள்ளடக்கியது. இந்த வாக்குறுதிகள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், கட்சியின் வாக்கு விகிதத்தில் முன்னேற்றத்தை கொண்டுவந்தது.

77
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான கொள்கைகள்:

TVK தனது கொள்கைகள் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படையில் உருவானது. இது கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் மீதான மக்கள் நம்பிக்கையை மாற்றும் விதமாக இருந்தது. இதுவே புதிய ஆட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய அனைத்து காரணங்களும் தான் ஒரு புதிய அரசியலை தமிழ்நாட்டில் உருவாக்கி, 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் TVK முன்னிலை வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories