நிம்மதி பெருமூச்சு விட்ட இயக்குனர் ஷங்கர்.! சொத்து முடக்கம்- EDக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

Published : Mar 11, 2025, 11:54 AM ISTUpdated : Mar 11, 2025, 12:30 PM IST

எந்திரன் கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதற்கு எதிராக ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

PREV
15
நிம்மதி பெருமூச்சு விட்ட இயக்குனர் ஷங்கர்.! சொத்து முடக்கம்- EDக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

Director Shankar assets case : பிரபல இயக்குனர் ஷங்கர், காதலன், ஜென்டில் மேன், எந்திரன், இந்தியன் என பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர், இந்த நிலையில் எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த திரைப்படம் எந்திரன், இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. முதல் பாகம் பல கோடி ரூபாயை குவித்து வெற்றிப்பெற்றது. இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

இந்த நிலையில் இந்த படத்தின்  திரைப்பட கதை விவகாரத்தில்  இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை  அமலாக்கத்துறை முடக்கியது. 
 

25
இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறினாரா.?

எந்திரன் திரைப்பத்தின் கதை தனது கதை எனவும் இயக்குனர் ஷங்கர் காப்புரிமையை மீறியதாகவும் கதை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்திருந்தார். அதன் படி,  1996-ம் ஆண்டு இணைய உதயம் இதழில் ரோபோவை மையமாக வைத்து ‘ஜூகிபா’ என்ற கதையை எழுதினார்.

இந்த கதையும் 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக வந்த எந்திரன் திரைப்படமும் ஒற்றுமையாக இருப்பதாக  கூறப்பட்டது.  தமிழ்நாடன் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

35
ஷங்கரை விடுவிக்க மறுத்த நீதிபதி

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும்  தொடர்ந்தார் தமிழ்நாடன். இந்த வழக்கில் ஆஜராகுமாறும் ஷங்கர் மற்றும் கலாநிதி மாறனுக்கு கடந்த 2011-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 

அதே நேரம் வழக்கில் இருந்து கலாநிதிமாறனை விடுவித்த நீதிமன்றம், ஷங்கருக்கு கதை திருட்டில் முகாந்திரம் இருப்பதால், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

45
சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்தநிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை என தெரிவித்தார். எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் இயக்குனர் ஷங்கர் 11.5 கோடி ரூபாய் ஊதியமாக பெறவில்லையென்றும்,

படத்தின் பல்வேறு பணிகளுக்காகவும் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தனி நபர் அளித்த  புகாரின் அடிப்படையில்  குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

55
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

மேலும், புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் திடீரென நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த  அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு,  அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குனர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே இன்றைய வழக்கு விசாரணையின் முடிவில் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும்  மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories