அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா.? கையை விட்டு சென்ற 13 தொகுதிகள் என்ன..? என்ன.?

First Published | Jun 5, 2024, 12:31 PM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களை கைப்பற்றிய நிலையில், திமுக - பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருக்க கூடிய நிலை உருவாகியிருக்கும் என வாக்குகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. 

கூட்டணி முறிவு - பின்னடைவு

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமகவிற்கு  அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக -பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணா தொடர்பான கருத்துகளுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  இதனால் அதிமுக- பாஜக இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது. 
 

தனித்து போட்டி- 13 தொகுதிகள் இழப்பு

ஒரு கட்டத்தில் அதிமுக தங்களது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டது.  இதன் காரணமாக இரண்டு பேரும் தனித்து தேர்தலில் எதிரி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதன் காரணமாகவே தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக மற்றும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. ஒருவேளை இரண்டு கட்சிகளும் தேர்தலை சேர்ந்து சந்தித்திருந்தால் 13 தொகுதிகளை வரை வெற்றி பெற்று இருக்க முடியும் என தெரியவந்துள்ளது. 

Latest Videos


Election vote Counting

வாக்கு வித்தியாசம் என்ன.?

அந்த வகையில் ஆரணி, சிதம்பரம், கோவை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளை அதிமுக பாஜக ஆகிய இரு கட்சிகளும் இழந்துள்ளது. ஆரணி தொகுதியை பொருத்தவரை திமுக வேட்பாளர் தரணி வேந்தன் 5லட்சத்து99 வாக்குகள் பெற்றிருந்தார் இதற்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2,91 ஆயிரத்து 333 வாக்குகளையும் பாமக வேட்பாளர் கணேஷ் 2 லட்சத்து 36 ஆயிரத்து 577 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

அண்ணாமலை தோல்வி

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 5 லட்சத்து 5084 ஓட்டுகளை பெற்றிருந்தார். இதற்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 4 லட்சத்து ஆயிரத்து 530 வெற்றிகளை பெற்றிருந்தார்.  பாஜக வேட்பாளர் கார்த்திகாயினி ஒரு லட்சத்து 68,493 வாக்குகளையும் வாங்கி இருந்தார்.

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4,50,132 ஓட்டுக்களையும் பெற்றுள்ளார்கள். 

 சவுமியா தோல்வி

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அசோகன் 2 லட்சத்து 93 ஆயிரத்து 629 வாக்குகளை வாங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 5 லட்சத்தி 61 ஆயிரத்து 589 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 5 லட்சத்து  7ஆயிரத்து 805 ஓட்டுகளும், பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் 71 ஆயிரத்து 290 வாக்குகளும் பெற்றுள்ளார்.

விஷ்ணு பிரசாத் வெற்றி

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4லட்சத்து 55ஆயிரத்து 053 வாக்குகளை பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2 லட்சத்து 69 ஆயிரத்து 157 வாக்குகளும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 2 லட்சத்து 5ஆயிரத்து 244 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். 

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை வேட்பாளர் கோபிநாத் 4,92,883 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 3 லட்சத்து 397 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 2,14,125 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி மாதேஸ்வரன் 4லட்சத்து 62ஆயிரத்து 36 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கே பி ராமலிங்கம் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 690 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 4 லட்சத்து 32ஆயிரத்து 924 வாக்குகளும் பெற்றுள்ளார்.
 

கிருஷ்ணசாமி- ஜான் பாண்டியன் தோல்வி

சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 4லட்சத்து 95 ஆயிரத்து 728 வாக்குகளும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 139 ஓட்டுகளும் பெற்றுள்ளார்கள். தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகளை பெற்றுள்ளார். இதற்கு அடுத்ததாக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகளும் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் 2லட்சத்து 8ஆயிரத்து 825 வாக்குகளை பெற்றுள்ளார்.

சிறுபான்மையினர் வாக்குகள் கிடைத்திருக்குமா.?

இதே போல திருப்பூர் விழுப்புரம் விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட அதிமுக பாஜகவினர் அதிக வாக்குகளை வாங்கியுள்ளனர். ஒருவேளை இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் குறைந்தபட்சம் பத்து முதல் 15 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம்.

ஆனால் தனித்துப் போட்டியிட்ட காரணத்தால் இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை அதே நேரத்தில் அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு முழுமையாக சென்று இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

click me!