Thamirabarani Flood Alert தாமிரபரணியில் 16,000 கன அடி நீர் திறப்பு. நெல்லை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கத் தடை. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் அதிகளவிலான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25
தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
35
அணைகளில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்
தொடர் மழையின் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரையாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து சுமார் 12,000 கன அடி நீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 4,000 கன அடி நீரும் என மொத்தம் 16,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் அளவைப் பொறுத்து, ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம். இதனால் ஆற்றில் நீரின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
55
கால்நடைகள் மற்றும் கரையோர பாதுகாப்பு
மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் நீர் வரத்தை கவனித்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.