Resolution Against Honor Killings At The TVK Conference
தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 2 லட்சம் தொண்டர்க்ள் முன்னிலையில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், பாஜகவையும், திமுகவையும் நேரடியாக தாக்கினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும், தன்னை தொடர்ந்து எதிர்க்கும் சீமானையும் மறைமுகமாக விமர்சித்தார்.
24
ஆணவ படுகொலை குறித்து பேசாத விஜய்
நீட் தேர்வு, மீனவர்கள் பிரச்சனை ஆகியவை குறித்தும் திமுக அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை குறித்தும் விஜய் பேசினார். அதே வேளையில் நெல்லையில் நடந்த கவின் ஆணவப்படுகொலை குறித்து விஜய் வாய் ஏதும் திறக்கவில்லை. கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
ஆனால் விஜய் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதனால் மதுரை மாநாட்டில் இது குறித்து விஜய் பேசுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், இங்கும் விஜய் பேசவில்லை.
34
தவெக தீர்மானத்தில் ட்விஸ்ட் வைத்த விஜய்
இதனால் தவெக தொண்டர்களே அதிர்ச்சி அடைந்த நிலையில், தவெக நிறைவேற்றிய தீர்மானத்தில் ஆவணக்கொலையை கண்டித்தும், இதனை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றக்கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெகவின் தீர்மானத்தில், ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம். இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிவரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது.
சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டி கழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்?
ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.