தமிழகத்தில் நேற்று 100 டிகிரியை தாண்டிய வெயில்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

Published : May 11, 2025, 10:56 AM IST

நேற்று 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
தமிழகத்தில் நேற்று 100 டிகிரியை தாண்டிய வெயில்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
கத்தரி வெயிலில் மழை

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியதால் வெயில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த நிலையில் அன்றைய தினம் முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 

24
நேற்று 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதாவது மதுரை விமான நிலையம் - 104 டிகிரி, மதுரை நகரம் - 103.28 டிகிரி, ஈரோடு - 103.28 டிகிரி, கரூர் பரமத்தி - 103.1 டிகிரி, கரூர் பரமத்தி - 103.1, பாளையங்கோட்டை - 102.02 டிகிரி,  திருத்தணி - 101.48 டிகிரி,  திருச்சி - 101.3 டிகிரி,  தருமபுரி - 100.4 டிகிரி உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்தது. 
 

34
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

44
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories