குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. என்ன காரணம் தெரியுமா?

First Published | Sep 6, 2023, 3:04 PM IST

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி வரும் 10  மற்றும் 11ம் ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் தினம் செப்டம்பர் 11ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 23ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

இதனிடையே, இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 10 மற்றும் 11ம் ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் விடுமுறையை அறிவித்ததுள்ளது.

Latest Videos

click me!