ஆம்னி பேருந்தை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து.. இவ்வளவு வசதிகள் இருக்கா? வியப்பில் பொதுமக்கள்

Published : Dec 24, 2025, 01:40 PM IST

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக 130 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

PREV
15
ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் அரசு பேருந்து

அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள். பெங்களூரில் இந்தப் பேருந்துகளை கட்டமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 20 அதிநவீன சொகுசு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.

25
அதி நவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, சுமார் 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதி நவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளை சென்னை தீவுத்திடல் வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதி நவீன சொகுசு பேருந்துகள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தஞ்சாவூர், சேலம், திருப்பூர், பெங்களூர் கோவை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு முதல்கட்டமாக 20 அதிநவீன வால்வோ பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

35
அதிநவீன குளிர் சாதன புதிய பேருந்தின் சிறப்பம்சங்கள்

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்தில், பயணிகளுக்கு உயர்தர மற்றும் வசதியான இருக்கை அமைப்பு, 2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 வசதியான இருக்கைகள், வெளிப்புற காட்சியை ரசிக்க விசாலமான Panoramic ஜன்னல்கள், வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை USB Mobile Charging Ports, பத்திரிகைகள், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம்.

45
ஓட்டுநர் இருக்கை

வசதிமனித உடல் அமைப்பிற்கு ஏற்ற Ergonomic Control Layout, வளைந்த வடிவ Dashboard, Air-Suspension கொண்ட ஓட்டுநர் இருக்கை, முழங்கால் பாதுகாப்பு அமைப்பு (Knee Impact Protection System), L PX Suspension System - L Steering Stability, Air Spring-, Shock Absorber System. EVSC, ESP, ASR மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தீ பாதுகாப்பு அமைப்பு,

55
ரிவர்ஸ் சென்சார் வசதி

அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான Roof Escape Hatch, முன், பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும் FUP / FIP / SUPD பாதுகாப்பு அமைப்புகள். மேம்பட்ட Rollover & Pedestrian பாதுகாப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் BS-VI, அவசரகாலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு அவசரகால வெளியேறும் வழி, விபத்துகளை தவிர்த்திட வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள், வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிய Electronic Diagnostic Control வசதி, ரிவர்ஸ் சென்சார் வசதி மற்றும் கேமரா, வாகனத்தை கண்காணித்திட Bus Tracking System வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories