தமிழகத்தில் மார்ச் 2026ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு பிப்ரவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 8ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
24
அரசு தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் (By Transfer) நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள அக்டோபர் 21 முதல் நவம்பர் 12 வரையிலான நாட்களிலும் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களிலும் மற்றும் டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரையிலான நாட்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
34
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தற்போது மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் நேற்று முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான dgeapp.tnschoolsgov.inக்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Passwordஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், +1 Arrear பெயர் பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் ஜனவரி 24 அன்று முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான dgeapp.tnschoolsgov.in க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Passwordஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.