11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள்! தேர்வுத் துறை வெளியிட்ட ரொம்ப முக்கிய செய்தி!

Published : Feb 11, 2025, 08:37 AM IST

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத் துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஹால் டிக்கெட் வெளியீடும் தேதி வெளியாகியுள்ளது. 

PREV
14
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள்! தேர்வுத் துறை வெளியிட்ட ரொம்ப முக்கிய செய்தி!
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள்! தேர்வுத் துறை வெளியிட்ட ரொம்ப முக்கிய செய்தி!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024-25ம் நடப்பாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிட்டிருந்தது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த பொதுத்தேர்வை மொத்தம் 20 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

24
தேர்வுத் துறை

இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை எப்போது வெளியிடுகிறது என்ற தகவலை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 12 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதியும், 11 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்படப்படுகிறது. 

34
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

44
தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்

அதேபோல், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்  வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் பிப்ரவரி 14-ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories