Published : Feb 11, 2025, 08:21 AM ISTUpdated : Feb 11, 2025, 11:56 AM IST
கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. காரிப் பருவ காய்கறிகள் வரத்தால் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூட்டை மூட்டையாக வந்த தக்காளி,வெங்காயம்.!ஒரு கிலோ இவ்வளவு தானா!!
காய்கறிகள் தான் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை தக்காளி, வெங்காயத்தின் தேவை அதிகமாக உள்ளது. அந்த வகையில் அசைவ உணவுகளுக்கு இணையாக காய்கறிலும் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுப்படுகிறது. இந்த நிலையில் தான் காய்கறிகளின் விலை ஒரு நேரத்தில் உயர்ந்தால் அடுத்த சில வாரங்களில் சரியும்.
அதே போல தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் வீடுகளில் தக்காளி, வெங்காயம் சார்ந்த உணவுகளை சமைப்பதை தவிர்த்தனர்.
25
உச்சத்தை தொட்ட காய்கறி விலை
இருந்தாலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் என்பது இயலாத காரியம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உருவானது. எனவே மாத பட்ஜெட்டில் காய்கறிகளுக்கு என கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே எப்போது காய்கறிகளின் விலை குறையும் என பொதுமக்கள் காத்திருந்தனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தற்போது விலையானது சரசரவென குறைந்துள்ளது. காரிப் பருவ காய்கறிகளின் வரத்தின் காரணமாக விலையானது குறைந்து வருகிறது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், வெங்காயம் 20 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
35
காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக இல்லத்தரசிகள் அதிகளவு தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
55
காய்கறிகளின் விலை நிலவரம்
பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது