நெருங்கியது கன மழை.! பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்குமா.? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Published : Dec 09, 2024, 07:10 AM IST

தமிழகத்தில் டிசம்பர் 11 முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும், சென்னை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் எந்தெந்த தேதிகளில் மழை பெய்யும் என்பது குறித்தும் விரிவான வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த மழை எந்த அளவுக்கு கனமாக இருக்கும், புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது போன்ற தகவல்களும் இதில் அடங்கும்.

PREV
17
நெருங்கியது கன மழை.! பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்குமா.? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
RAIN CHENNAI

மீண்டும் தொடங்குகிறது கன மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயல் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் பாதிப்பில் இருந்து இன்னும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மீளவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை ஓய்வு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சுற்று மழை வருகிற 11ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக வானிலை தகவல்களை தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,
 

27

தேதி குறித்த வானிலையாளர்

டெல்டா முதல் KTCCசென்னை வரை வட தமிழக கடற்கரையில் வருகிற 11 மற்றும் 12 தேதியிலும், தெற்கு மற்றும் உள் தமிழகத்திலும் டிசம்பர் 13 மற்றும் 14 தேதியிலும் மழை பெய்யும் என தெரிவிள்ளதுள்ளார்.  

1. தமிழகத்திற்கு இதுதான் கடைசி மழையாக  இருக்குமோ ?

டிசம்பர் 3வது வாரம் முதல் இறுதி வாரம் வரை (இந்தோ சீனா) மழை தொடரும்.  இந்த மழையால் இது நமக்கும் சிறந்த கட்டமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நமக்கும் கெட்ட கட்டமாக இருக்காது என தெரிவித்துள்ளார். இந்தோ சீனா கடல் பகுதியில் இருந்து சுழற்ச்சி வங்காள விரிகுடாவிற்கு தள்ளுகிறது. டிசம்பர் 16-18 அன்று இந்த காற்றழுத்த அழுத்தமாக மாறும், வட கிழக்கு பருவமழை சீசனின் முடிவாக இருக்குமா என்பதை தற்போது கூற இயலாது.

37

2. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில்  டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் கனமழை பெய்யும். ஆனால் இது சமாளிக்கக்கூடிய மழை பெய்யும். எனவே இந்த மாவட்டங்களில்  11 அல்லது 12 ஆம் தேதி அல்லது ஒரு நல்ல மழை கிடைக்கும்.

3. புதுச்சேரி மற்றும் டெல்டா கடற்கரைகள்

 டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், வில்புரம், பாண்டி கடற்கரை பகுதிகள் கனமழைக்கு வாய்ப்பு
 

47
Heavy Rain

4. புயலாக மாற வாய்ப்பு ? - 

இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவு. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம்.  ஃபெங்கால் புயல் போல இது நீடிக்கப் போவதில்லை.

5. தென் தமிழகம் மழை நிலவரம் என்ன.?

நெகடிவ் உள்ள ஒரே மாவட்டங்கள் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர். ராமநாதபுரம், நெல்லை, குமரி  டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மழை பெய்யும் ஆனால் வட தமிழக கடற்கரையை ஒப்பிடுகையில் மழை கனக்காது.

57

6. தமிழக உட்பகுதிகளில் மழை நிலவரம்

மன்னார் வளைகுடா வழியாக அரபிக்கடலுக்கு தாழ்வு கடக்கும் போது ஒரு நாள் மழை பெய்யும், அப்போது மேற்கு தமிழகம் மற்றும் உள்பகுதிகள் மழை பெய்யும்

7.வடகிழக்கு பருவமழை மொத்த நிலவரம்

கிறிஸ்துமஸ் வரை தமிழகம் மழையை பெறும், இந்த பருவமழை காலமான வடகிழக்கு பருவமழை சீசனில் தமிழகம் 500 மி.மீட்டர் மழை அளவை தாண்டும்.  சென்னை நகரம் மீண்டும் 1000 மில்லி மீட்டரை  கடக்கும்

67
Heavy rain school leavev

8. மீனவர்களுக்கு எச்சரிக்கை

 காற்றழுத்த தாழ்வு பகுதியால்  10 முதல் 13 வரை கடல் மிகவும் கடினமாக இருக்கும்.

9. பள்ளி மாணவர்கள்

 தேர்வு நடக்கும் நல்லா படிங்க, விடுமுறைக்கு டிவியில் ஒட்ட வேண்டாம். அந்த கனமழை நாட்களில் இரவில் பெய்த மழை மற்றும் மேலும் மழை நிகழ்வுகள்  அடிப்படையில் கலெக்டர் முடிவு எடுப்பார். ஆக நல்லா தேர்வுக்கு படிங்க.

77
chennai rain

10. மழை எங்கே எவ்வளவு பெய்யும்

காற்றழுத்த தாழ்வு பகுதியால் எந்த தேதியில் மழை என தற்போது தெரியவந்துள்ளது. இது நம்பை நெருங்கும் போது எந்த பகுதியில் பாதிப்பு இருக்கும் எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என கணிக்க முடியும் என தெரிவித்துள்ளார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories