ஜனவரியில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, குடியரசு தின விடுமுறை என மொத்தம் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது. ஜனவரி மாத முழுமையான லீவு லிஸ்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றுடன் சேர்த்து அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று (ஜனவரி 5) தான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் எப்போது விடுமுறை வரும் என மாணவர்கள் காலண்டரில் தேட ஆரம்பித்து விட்டனர். மாணவர்கள் மகிழ்ச்சி அடையும்விதமாக ஜனவரியில் மட்டும் இன்னும் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளன.
24
பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை
அதாவது ஜனவரி 15ம் தேதி (வியாழக்கிழமை) தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (16ம் தேதி வெள்ளிக்கிழமை) திருவள்ளூவர் தினம் என்பதால் அன்றும் அரசு விடுமுறை நாள் தான். சனிக்கிழமை (ஜனவரி 17ம் தேதி) உழவர் திருநாள். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) லீவு என்பதால் 4 நாட்கள் கொத்தாக விடுமுறை கிடைக்கும்.
34
குடியரசு தின தொடர் விடுமுறை
இதேபோல் ஜனவரி 26ம் தேதி (திங்கட்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாக சனிக்கிழமை (ஜனவரி 24), ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) லீவு என்பதால் குடியரசு தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
மேலும் ஜனவரி 10 (சனிக்கிழமை), ஜனவரி 11 (ஞாயிற்றுக்கிழமை), ஜனவரி 31 (சனிக்கிழமை) ஆகிய வார விடுமுறை நாட்களையும் சேர்த்தால் ஜனவரியில் மொத்தமாக 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கிறது.
ஜனவரியில் பொங்கல் பண்டிகை விடுமுறை, குடியரசு தின விடுமுறை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 10 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் குஷியடைந்துள்ளனர். விடுமுறை நாட்களை இப்போதே காலண்டரில் நோட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.