டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதேபோல் சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சீரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பரவாலாக மழை பெய்தது. இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (டிசம்பர் 4) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.