பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ஒவ்வொரு கோடையிலும் எக்ஸ்டிரா ரூ.2,000.. தமிழக அரசு குஷியான அறிவிப்பு!

Published : Feb 19, 2026, 09:25 PM IST

இனி ஒவ்வொரு கோடையிலும் பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் குஷியடைந்துள்ளனர். 

PREV
14
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டது. யாரும் எதிர்பாராதவிதமாக அக்கவுண்ட்டில் ரூ.5,000 வந்ததால் பெண்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.

24
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

தேர்தலை காரணம் காட்டி பாஜகவினர் நீதிமன்றம் வாயிலாக மகளிர் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்த முயன்றதால் திமுக அரசு முந்திக்கொண்டு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே பெண்களுக்கு வழங்கியதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் தோல்வி பயம் காரணமாக திமுக அரசு பெண்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

34
சட்டப்பேரவையில் இபிஎஸ் கேள்வி

மேலும் கோடை கால சிறப்புத் தொகுப்பு என ரூ.2,000 வழங்கியது ஏன்? திமுக ஆட்சியில் இத்தனை ஆண்டு காலம் கோடை காலமே வரவில்லையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் ஆகியோர் கேள்விகலை எழுப்பியிருந்தனர். 

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்து விட்டதால் கோடைகால சிறப்பு தொகுப்பு என கூறி ரூ.2,000 கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தான் கோடை காலம் வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை யாரும் எதிர்க்காதபோது தேர்தலை மனதில் வைத்து முன்கூட்டியே வழங்கியுள்ளீர்கள்'' என்றார்

44
இனி ஒவ்வொரு கோடையிலும் ரூ.2,000

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், ''கலைஞர் ஆட்சியில் இலவச டி.வி.க்கள் வழங்கியபோது அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். பாஜகவை சேர்ந்த ஒருவர் மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சூழ்ச்சியை முறியடித்துள்ளோம். 

இனி எல்லா ஆண்டிலும் கோடை காலத்தில் பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்'' என்றார். தேர்தல் முடிந்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் பெண்களுக்கு கோடை காலத்தில் ரூ.2,000 எக்ஸ்டிராவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories