TN Rain Update: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை.. 4 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

Published : Jun 29, 2026, 09:07 AM IST

TN Rain Update: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது? எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் இன்று வெளியே செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் வானிலை நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25
வானிலை மையம்

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து குமரிக்கடல் வரை ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பல மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
தமிழகத்தில் இன்று மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதுடன், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.

45
வானிலை அறிக்கை

வானிலை முன்னறிவிப்பின்படி, ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

55
மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதற்கிடையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இந்த நாட்களில் குறிப்பிட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories