வெயிலுக்கு குட்பை.. ஒரு வாரம் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட் இதோ!

Published : Mar 15, 2026, 08:23 PM IST

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெயில் பாடாய்படுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அனல் கொதிக்கிறது. அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

24
ஒரு வாரத்துக்கு மழை பெய்யும்

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

34
எந்தெந்த தேதிகளில் மழை?

அதாவது மார்ச் 16ம் தேதி (நாளை) நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 17ம் தேதி (நாளை மறுநாள்) தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
சென்னையில் மழைக்கு வாய்ப்பு உண்டா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகத்தில் ஓரளவு மழை இருந்தாலும், ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories