
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் பல்வேறு பகுதிகளில் மழைப் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாதது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நவம்பர் 29-ம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நவம்பர் 30-ம் தேதி வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. டிசம்பர் 1-ம் தேதி மழையின் பரவல் அதிகரிக்கலாம். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 2-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். டெல்டாவை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 4-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 29-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். நவம்பர் 30-ம் தேதியும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அன்றைய அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.