வாக்குச்சாவடியில் போன் வைக்க தனி வசதி.. மூத்த குடிமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்!

Published : Mar 15, 2026, 04:56 PM IST

Tamil Nadu election 2026: வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டுகள் மிகவும் தெளிவாகவும், தேவையான விவரங்களுடனும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

PREV
14
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 9ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

24
மொபைல் போன்கள் அனுமதி இல்லை

வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்கள் அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் தங்களின் மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான வசதி வாக்குச்சாவடிக்கு வெளியே செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். மற்றும் பெரிய அளவிலான எழுத்துக்கள் பயன்படுத்தப்படும்.

34
ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை (Booths) அமைத்துக்கொள்ளலாம். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டுகள் மிகவும் தெளிவாகவும், தேவையான விவரங்களுடனும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

44
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்

வாக்குச்சாவடிகளில் மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க அவர்களுக்கு நேரடி முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் வந்தவுடன் நேரடியாகச் சென்று வாக்களிக்கலாம். மேலும் நடக்க சிரமப்படும் முதியவர்களுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி (Wheelchair) வசதி இருக்கும். மேலும் முதியவர்கள் தடையின்றி உள்ளே செல்ல சாய்தளப் பாதைகள் (Ramps) அமைக்கப்பட்டிருக்கும்

Read more Photos on
click me!

Recommended Stories