Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

First Published | Dec 7, 2024, 12:39 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே ஜனவரி 10ம் தேதி வழங்கப்படும் என எதிக்கப்படுகிறது.

Pongal Festivel

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சொந்த பந்தங்களுடன் சொந்த ஊருக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்.

Ration Shop

இந்நிலையில் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: School Teacher: ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்! இனி விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

Tap to resize

Pongal Gift

கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

Magalir Urimai Thogai

அதேபோல் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 11, 12 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுவதால் மகளிர் உரிமைத் தொகை ஜனவரி 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

Tamilnadu Government

ஏற்கனவே அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 இரண்டையும் சேர்த்து 2000 ரூபாய் கிடைக்கும். இதனால், பொதுமக்கள் தற்போதே மகிழ்ச்சியில் உள்ளனர். 

Latest Videos

click me!