School Teacher: ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்! இனி விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

First Published | Dec 7, 2024, 12:11 AM IST

School Teacher: தமிழகத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Education Management Information System

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. 

kalanjiyam

அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது ஆணையர் முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tap to resize

School Teacher

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அனைத்துப் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) விடுப்புக் கோருதலுக்கான " CCMC ALL SCHOOLS TEACHERS வாட்ஸ் ஆப் " ( Whatsapp ) குழுவில் சிறுவிடுப்புகள் ( தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு ) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து , ஆணையர் அவர்களால் விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் , 

CCMC ALL SCHOOLS TEACHERS

இதர விடுப்புகள் ( மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ) ஆணையர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  மேற்குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் ( Whatsapp ) குழுவில் தமது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!