நகைக் கடன் தள்ளுபடி திட்டம்.! குஷியான தகவல் சொன்ன தமிழக அரசு

Published : May 22, 2025, 03:13 PM IST

தமிழகத்தில் 11,70,309 பயனாளிகளுக்கு ரூ.4903 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதிமுறைகளுக்கு தமிழக நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

PREV
15
தமிழக மக்களின் நகைக்கடன்

தமிழக மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தங்களின் நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து பணம் பெறுவார்கள். தங்களால் நகைகளை திரும்ப பெற முடியாமல் பல ஆண்டு காலம் வட்டி மட்டுமே கட்டி வருவார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பை வெளியிடும் அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நகைக்கடன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக நகை கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது

25
நகைக் கடன்கள் 11,70,309 பயனாளிகளுக்கு தள்ளுபடி

48,84,726 நகைக்கடன் விவரங்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் 35,37,693 கடன்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதவை என்றும், 13,47,033 நகைக் கடன்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நகைக்கடன் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தகுதியான ஏழை எளிய மக்கள் நகைக் கடன் தள்ளுபடியால் பயனடையக்கூடிய வகையில், ஒரு குடும்பத்திற்கு 40 கிராம் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் ரூ. 4903 கோடி மதிப்புள்ள நகைக் கடன்கள் 11,70,309 பயனாளிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

35
நகைகளை அடகு வைக்க புதிய விதிமுறை

இதனிடையே தங்க நகை அடமானம் தொடர்பாக ரிசர்வ் வங்கி திட்டத்திற்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

45
மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட

குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து. 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும். அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற

55
ரிசர்வ் வங்கியின் புதிய 9 விதிமுறைகள்

புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்

Read more Photos on
click me!

Recommended Stories