தமிழ் மொழி - வெளியான சுற்றறிக்கை
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் ராஜாராமன் அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளார். தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் வெளியிடப்பட்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறு தங்களை கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன் படி
1. அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும்.
2. சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்.