அட இது வேற லெவலா இருக்கே! இனி ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்!

Published : Sep 22, 2025, 09:20 AM IST

தமிழ்நாடு அரசு 'சென்னை ஒன்று' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மற்றும் ஆட்டோ சேவைகளை ஒரே QR பயணச்சீட்டின் கீழ் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை இது நீக்குகிறது.

PREV
14
சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் மக்களை தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பண மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்க வேண்டிய நிலையும் உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு ஒரே ஆப் மூலம் அனைத்து வகையான பயண சீட்டையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

24
சூப்பர் திட்டத்தை தொடங்கும் முதல்வர்

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை (22.9.2025) இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

 விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் LALIGOOT செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொது போக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும்பயணத் தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

34
ஒரே டிக்கெட்டில் பயணம்

இந்தியாவிலேயே முதன்முறையாக போக்குவரத்தையும் மற்றும் இணைக்கும் ஆண்ட்ராய்டு தளங்களில் அனைத்து பொது வகையில் ஐ.ஓ.எஸ் செயல்படக்கூடிய "சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலியை" தமிழ்நாடு முதலமைச்சர் ( 22.9.2025) இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

 இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள். மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

44
வரிசையில் காத்திருக்க

இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. "சென்னை ஒன்று செயலி" பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொது மக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம். 

Read more Photos on
click me!

Recommended Stories