சென்னை மக்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! புதிய மெட்ரோ வழித்தடத்திற்கு ஒப்புதல்- எங்கே இருந்து எங்கே தெரியுமா.?

Published : May 02, 2025, 05:01 PM IST

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் பயனடைவார்கள்.

PREV
14
சென்னை மக்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! புதிய மெட்ரோ வழித்தடத்திற்கு ஒப்புதல்- எங்கே இருந்து எங்கே தெரியுமா.?
சென்னையில் போக்குவரத்து நெரிசல்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையில் ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரம் வெயிலில் நடு ரோட்டில் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் தான் பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரில் மெட்ரோ ரயில் சேவையானது கொண்டு வரப்பட்டது.

இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக அலுவலகத்திற்கு செல்பவர்கள் பேருந்து, பைக்கில் செல்வதை தவிர்த்து பெரும்பாலும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். 

24
சென்னையில் மெட்ரோ ரயில்

அந்த வகையில் தற்போது விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும்  மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களிலும் 118.9 கிமீ தூரத்துக்கு  ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

34
சென்னையில் புதிய வழித்தடத்திற்கு ஒப்புதல்

தற்போது புதிய வழித்தடம் அமைக்க ஆய்வு செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு- பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட  சாலையில் 21.76 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் படி 9928.33 கோடி மதிப்பீட்டில் ,

44
நிதி கோர அனுமதி

464 கோடியில் மூன்று மேம்பாலங்களோடு கூடிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது . 

தற்போது இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும் , பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் குறைவான நேரத்தில் குறித்த இடத்திற்கு வந்து சேர முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories