தங்க நகை விற்பனை.! பொதுமக்களுக்கு குஷியான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு

First Published | Dec 8, 2024, 7:56 AM IST

தங்கத்தின் விலை சமீபத்தில் உயர்ந்து சவரன் ரூ.60,000ஐ எட்டியது. தற்போது சிறிது குறைந்துள்ள நிலையில், நகை மற்றும் ரத்தினக் கற்கள் தொடர்பான இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது.

Gold rate

தங்கத்தில் முதலீட்டு ஆர்வம்

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு 45 ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தங்க நகை சந்தையில் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 60ஆயிரம் என ஒரு சவரன் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயை மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 4000 ரூபாய்க்கு சரிந்தது.

Gold Rate in chennai

ஏறி இறங்கும் தங்கம் விலை

இதனையடுத்து வந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவித்தனர். அதே நேரம் மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் நாள் தோறும் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அதிகரித்தது.

நேற்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம்  7115 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 56, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்க வர்த்தக சந்தை விடுமுறையாகும். எனவே தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இருக்காது.

Tap to resize

நகைக்கடையில் பயிற்சி

இந்த நிலையில் தங்க நகைக்கடையில் தங்கம் மற்றும் ரத்தினக் கற்கள் தரத்தை பார்ப்பது, விற்பனை செய்வது தொடர்பாக வேலை வாய்ப்பு பயிற்சியை தமிழக அரசு   நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ஜூவல்லரி சில்லறை விற்பனை அசோசியேட் ஜெம் & ஜூவல்லரி சார்பாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

gold rate

வேலை விவரம்

 நகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பணி

ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் பற்றிய தரவுகள், ஆபரணங்களை தயாரிப்பது எப்படி என்ற தகவலை வழங்கும் பணி

நகைகளை விற்பனை செய்வது மற்றும் விற்பனை பதிவுகளை பராமரிப்பது

நகைக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நட்புறவை உருவாக்குகள் மற்றும் சிறந்த முறையில் வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்
 

gold rate

பணிக்கான தகுதி

 10வது தேர்ச்சி அல்லது அதற்கு மேல்

வயது

குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்

நகைகள் தொடர்பாக பயிற்சி காலம்

பயிற்சி காலம்: 150 மணிநேரம்

திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

பயிற்சி இடங்கள்

மதுரை

gold rate

பயிற்சி முறை: நேரடியாக பயிற்சி

வேலை வாய்ப்பு வாய்ப்புகள்

கார்ப்பரேட் நகைக்கடைகள்

நடுத்தர நகைக்கடைகள்

மைக்ரோ & சிறிய நகைக்கடைகள்

 சம்பளம்

ஆரம்ப சம்பளம் மாதம் 12,000 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியானது இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!