ரொம்ப கம்மி வட்டியில் 8 லட்சம் வரை கல்வி கடன்.! மாணவர்களுக்கு அரசின் குஷியான அறிவிப்பு

Published : Jun 12, 2025, 07:27 AM IST

தமிழக அரசு  மாணவர்களுக்கு கல்வி கடன் உதவித்திட்டத்தை அறிவித்துள்ளது. தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பட்டப்படிப்புகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வருமான வரம்பு மற்றும் வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களுக்கு தொடர்புடைய அலுவலகங்களை அணுகவும்

PREV
16
மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டங்கள்

கல்விதான் மாணவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் கருவியாகும். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பாக மாணவர்களுக்கு இவலச கல்வியையும், ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகையை வழங்கி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டமும் நடைமுறைப்படுத்துகிறது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்கான கல்வி கடன் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

26
கல்வி கடன் திட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலை வாய்ப்பு / பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடனுதவி திட்டங்களை அறிவித்துள்ளது.

36
தகுதியான கல்வி கட்டணங்கள்

1. சேர்க்கைக் கட்டணம் / பயிற்றுவிப்புக் கட்டணம்.

2. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள்.

3. தேர்வுக் கட்டணம்.

4. விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்)

விண்ணப்பிக்கும் இடம்:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.

46
விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள்

1. மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.

2. வருமானச் சான்றிதழ் நகல்.

3. இருப்பிடச் சான்றிதழ் நகல்

4. ஆதார் சான்றிதழ் நகல்.

5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Cerificate) நகல்.

6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/ செலான் (Original)

7. மதிப்பெண் சான்றிதழ் நகல்

8. வங்கி கோரும் இதர ஆவணங்கள்

56
கல்வி கடன் திட்டம்-1

பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம்- ரூ.3,00,000 வரை

தொழிற்கல்வி / வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு)- ஆண்டிற்கு ரூ.4 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை

வெளிநாடுகளில் தொழிற்கல்வி /வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு) - ஆண்டிற்கு ரூ.6 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.30 இலட்சம் வரை.

வட்டி விகிதம்- ஆண்டிற்கு 3%

66
கல்வி கடன் திட்டம்-2

பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் - ரூ.8,00,000/- வரைக்கும் மிகாமல்

தொழிற்கல்வி / வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு)- ஆண்டிற்கு ரூ. 4 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை

வெளிநாடுகளில் தொழிற்கல்வி /வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு) - ஆண்டிற்கு ரூ. 6 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.30 இலட்சம் வரை

வட்டி விகிதம்- ஆண்டிற்கு 8% (மாணவர்களுக்கு ஆண்டிற்கு 5% (மாணவியர்களுக்கு)

Read more Photos on
click me!

Recommended Stories