8 GB DDR4 RAM, 256 GB SSD நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது. Windows 11 Home மற்றும் தமிழக அரசின் BOSS Linux ஆகிய இரண்டு இயங்குதளங்களும் உள்ளன. MS Office 365 மென்பொருள் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Perplexity Pro AI மென்பொருளின் 6 மாத கால சந்தா (Subscription) இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முடியும்.
720p HD கேமரா, Bluetooth 5.0 ஆகிய வசதிகள் உள்ளன. இந்த லேப்டாப்டை எடுத்துச் செல்ல தரமான பேக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.