ஜனவரி 2ம் தேதி விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Published : Dec 29, 2025, 09:44 AM IST

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஜனவரி 2ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

PREV
15
அரையாண்டு தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் 10-ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி 23ம் தேதி முடிவடைந்தது.

25
அரையாண்டு தேர்வு விடுமுறை

இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில் உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

35
தாணுமாலயன் கோவில்

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருக்கும் தாணுமாலயன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்திரனுக்கு சாப விமோச்சனம் அளித்த தலமாகவும் இக்கோவில் புராணங்களில் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏரளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

45
உள்ளூர் விடுமுறை

இங்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா முன்னிட்டு ஜனவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலங்களுக்கும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

55
அரசு அலுவலகங்கள் செயல்படும்

இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 10-ம் சனிக்கிழமை மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் ஜனவரி 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories