தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ், தரமான கைத்தறி துணிகளை விற்பனை செய்து வருகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
கொத்து கொத்தாக அள்ளிட்டு போங்க- ஆஃபர்களை அள்ளி வீசிய கோ ஆப்டெக்ஸ்
நவ நாகரீக உலகத்திற்கு ஏற்ப ஆடைகளின் வடிவமைப்பும் மாறி, மாறி வருகிறது. இந்த போட்டி உலகத்தில் ஒவ்வொரு கடையிலும் விற்பனை விலையில் பல்வேறு மாறுதல்கள் உள்ளது. மேலும் துணியின் தரத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் துணிக்கடைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் அசத்தி வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
24
கோ-ஆப்டெக்ஸ் துணியின் தரம்
தனியார் துணி நிறுவனங்கள், கோ-ஆப்டெக்ஸ் துணியின் தரத்துக்கு போட்டி போட முடியாத வகையில் தரமான கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச நாட்களில் துணிகளுக்கு அதிரடியாக ஆஃபர்களை அள்ளி வீசியும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது.
மேலும் புதிய ரக துணி ரகங்களையும் விற்பனை செய்து வருகிறது. 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோவை பட்டுச் சேலைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
34
சலுகை விலையில் ஆடைகள் விற்பனை
இதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள் போன்றவைகளும் ஆண்களுக்கான கலர், கல்லாக பல்வேறு வகையான சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் ரகங்கள், வீட்டு உபயோக ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு தற்போது கோ ஆப்டெக்ஸ் அதிரடியாக சலுகை விலையில் விற்பனை அறிவித்துள்ளது.
44
2 துணி வாங்கினால் ஒன்று இலவசம்
அதன் படி, தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 50 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 மாதங்களில் இரண்டு துணிகள் அல்லது பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.