கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி.! லிஸ்ட் போட்டு சொன்ன தமிழக அமைச்சர்

Published : Feb 09, 2025, 09:58 AM ISTUpdated : Feb 09, 2025, 10:11 AM IST

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 4 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், கடன் தள்ளுபடி குறித்து அண்ணாமலை மற்றும் பெரியகருப்பன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்ட, பெரியகருப்பன், ரூ.19,878 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
14
கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி.! லிஸ்ட் போட்டு சொன்ன தமிழக அமைச்சர்
கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி.! புள்ளி விவரங்களை லிஸ்ட் போட்டு சொன்ன தமிழக அமைச்சர்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 வருடங்கள் முடிவடையவுள்ளது. இதனையடுத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான் கல்வி கடன் ரத்து, விவசாயிகள் கடன் ரத்து. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. எனவே இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆதி திராவிட மாணவர்கள் பெற்றிருந்த கல்வி கடன் ரத்து தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை செயல்படுத்தவில்லையென கூறியிருந்தார். 

24
அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

இதற்கு கூட்டுறவு அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில்,  தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலை அவர்கள் நினைவூட்டி எண்.33வது வாக்குறுதி என்று குறிப்பிட்டு அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை,

விவசாயிகளை ஏமாற்றுகின்ற ஒரு அரசாக முதலமைச்சர் இருக்கின்றார் என அண்ணாமலை அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார். துறை அமைச்சர் என்ற முறையில் நானும் அதற்கு உரிய விளக்கத்தை முறையாக அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தேன். அறிக்கையை படித்த பிறகு அவருக்கு நான் புரிந்திருக்கும் என்று தான் நான் நம்பினேன்.

34
அண்ணாமலை கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

ஆனால், அதை இன்னும் புரியாததை போல் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யமால் ஏமாற்றி விட்டார் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.  வாக்குறுதிகளில் தேர்தல் அறிவிப்பில் 33வது வரிசை எண் என்று குறிப்பிட்டிருக்கிராறே அதுவும் விவசாயிகளுக்கு நிறைவேற்றப்பட்டிருகிறது. குறிப்பாக, பயிர்கடன் ரூ.12,110 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 5 பவுன் அளவிற்கு கீழ் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்களுக்கு ரூ.5013 கோடி நகை கடன் தள்ளுபடி செய்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

44
நகை கடன் தள்ளுபடிஎவ்வளவு.?

மேலும், மகளிர் சுய உதவிக்குழுகளை சார்ந்த சகோதரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2755 கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டது. இவை அனைத்தும் மொத்தமாக ரூ.19,878 கோடி அளவிலான கடன்கள் 45,09,640 எண்ணிக்னையிலான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் தேர்தல் காலத்திலேயே வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திமுகஅரசு நிறைவேற்றி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன்களை இல்லை என்று இப்பொழுது மறுப்பது எந்த வகையில் நியாயம் பெரிய கருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories