இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக..! NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? ஸ்டாலின் பரபரப்பு பதிவு

Published : Feb 19, 2026, 01:34 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
14
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கம்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.

24
வெறுப்பில் ஊறிப்போன பாஜக

அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார். அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!

34
NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?

இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!

44
தமிழ்நாடா NDA-வா?

இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!

Read more Photos on
click me!

Recommended Stories