கோடை விடுமுறை மற்றும் ரயில் நெரிசல் காரணமாக பெங்களூரு - மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். ஏப்ரல் 30 முதல் மே 1 வரை இயக்கப்படும் இந்த ரயில், பெங்களூரு, பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரையை வந்தடையும்.
Summer holiday special train : கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக பொதுமக்கள் சுற்றுலா இடங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரயில்களில் குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேர விருப்பப்படுவார்கள்.
ஆனால் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் சிறப்பு ரயில் இயக்கப்படுமா என எதிர்பார்த்து காத்துள்ளனர். அதன் படி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
24
Southern railway announcement
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்
இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக கோடை விடுமுறை மற்றும் ரயில்களின் கூட்ட நெரிசல் காரணமாக சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது பெங்களூரில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
34
Bangalore Madurai special train
மதுரை- பெங்களூருக்கு சிறப்பு ரயில்
இந்த (TrainNo 06521/06522) சிறப்பு ரயிலானது பெங்களூரில் இருந்து மதுரைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மே 1ஆம் தேதி காலை 8:15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. இதே போல மே 1 ஆம் தேதி மதுரையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்புரயிலானது இரவு 7.50 மணிக்கு பெங்களூருவை வந்து சேருகிறது.
44
summer holiday special trains
முன்பதிவு எப்போது.?
இந்த சிறப்புரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டும், 16 மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகளும், சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது பெங்களூர், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரையை வந்து அடைகிறது. இந்த ரயில்க்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.