முன் கூட்டியே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.? பொறியியல் விண்ணப்பம் எப்போது தொடக்கம்- வெளியான முக்கிய தகவல்

Published : Apr 28, 2025, 01:24 PM IST

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி அல்லது அதற்கு இரண்டு தினங்கள் முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
14
முன் கூட்டியே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.? பொறியியல் விண்ணப்பம் எப்போது தொடக்கம்- வெளியான முக்கிய தகவல்

12th results And Engineering admissions : பள்ளி மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வுகள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது.இந்த தேர்வினை 7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள்,

24
Tamil Nadu 12th results

முன் கூட்டியே தேர்வு முடிவுகள்

18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் எனமொத்தமாக  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் எழுதினர். இதனையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணியானது தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

34
Anna University

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம்

இதனையடுத்து 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 9ஆம் தேதி அல்லது அதற்கு இரண்டு தினங்கள் முன்பாகவோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில்  மே 5ஆம் தேதியிலிருந்து பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்திருக்கிறது . விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் புதன்கிழமையுடன் முடிவடைகிறது.  அடுத்தகட்ட பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால்,

44
Engineering admission

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம்

2 தினங்களுக்கு முன்னதாகவே அதாவது மே முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே மாணவர்கள் உயர்கல்வியில் சேர அடுத்த திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பொறியியல் மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு மே முதல் வாரத்தில் துவங்கும் என்றும், குறிப்பாக மே 5ஆம் தேதியிலிருந்து துவங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more Photos on
click me!

Recommended Stories