வார இறுதி நாட்களில் வெளியூர் பயணம் செய்வோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா.? சுற்றுலாவிற்கு வெளியூர் செல்லலாம். தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்காக காலண்டரை பார்க்கும் மாணவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஜூன் மாதத்தில் எந்தவித விடுமுறையும் மாணவர்களுக்கு இல்லை, ஜூலை மாதமும் மொஹரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை கிடைக்காத நிலை உள்ளது. எனவே எப்போது மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் மாதமாகவே இந்த மாதங்கள் உள்ளது. இந்த நிலையில் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே மாணவர்களுக்கு விடுமுறை நாட்களாக உள்ளது.
24
வார இறுதி நாள் விடுமுறை- சிறப்பு பேருந்து
அந்த வகையில் வரும் வாரம் ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் வார இறுதி நாள் விடுமுறை வரவுள்ளது. இதனையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில்,
வருகிற வெள்ளிக்கிழமை 27/06/2025 முகூர்த்தம் 28/06/2025 (சனிக்கிழமை) 29/06/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
34
கோயம்பேடு, கிளாம்பாக்கம் சிறப்பு பேருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27/06/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 28/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27/06/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும்.
28/06/2025(சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 27/06/2025 மற்றும் 28/06/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
44
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,240 பயணிகளும் சனிக்கிழமை 2,182 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,727 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.