Southern Railway
தென்னக ரயில்வே இன்று நவம்பர் 18ம் தேதி வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகளில் காரணமாக, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மூன்று முக்கிய ரயில்களின் புறப்படும் இடமும், முடிவடையும் இடமும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை இந்த மூன்று ரயில்களும் தாம்பரத்திலிருந்து தான் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம்
Railways
சென்னை எக்மோர் முதல் ஜோத்பூர் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் தற்காலிகமாக சென்னை எக்மோரில் இருந்து புறப்படாமல் தாம்பரத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வண்டி எண் 22663 தாம்பரம் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், வருகின்ற 23 நவம்பர் 2024 முதல் தாம்பரத்தில் மதியம் 2 மணி 50 நிமிடங்களுக்கு புறப்பட்டு, தன்னுடைய வழக்கமான பாதையில் ஜோத்பூர் சென்றடையும். அதேபோல ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வரக்கூடிய எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22664) 26 அக்டோபர் 2024 அன்று மாலை 5.10 மணியளவில் எழும்பூர் செல்லாமல் தாம்பரத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tambaram
அதேபோல சென்னை எக்மோரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லக்கூடிய அதிவேக வண்டி வருகின்ற நவம்பர் 21ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மாலை 7.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும். பொதுவாக இந்த வண்டி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல நவம்பர் 22ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை எக்மோர் வந்து சேர வேண்டிய அதே எக்ஸ்பிரஸ், காலை 4.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதுவே அதன் கடைசி நிறுத்தமாக இருக்கும்.
Southern Railway
சென்னை எக்மோரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை அதிவிரைவு ரயில், வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் இரவு 8.55 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும். அதேபோல 21ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து, எழும்பூர் வரவேண்டிய அதே ரயில் அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். அதுவே அதன் கடைசி நிறுத்தமாக இருக்கும். பொதுவாக இந்த செங்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து இரவு 8:25 மணிக்கு எக்மோரில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த வண்டி தாம்பரத்திலிருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
2 நாட்களுக்கு மழை விடாமல் கொட்ட போகுது.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அப்டேட்