கோவையில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் விதமாக உக்கடம் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் வான்விளக்கு திருவிழா மற்றும் வான வேடிக்கை நடத்தப்பட்டது.கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ,கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று வான்விளக்குகளை ஏற்றி பறக்கவிட்டனர்.
24
கோவை வான்விளக்கு திருவிழா
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வான்விளக்குகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பின்னர் வானவேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. இந்த வான்விளக்கு, வானவேடிக்கை நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இதை காண வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
34
கோவை வான்விளக்கு திருவிழா
அதே வேளையில் பல்லுயிர் சூழல் கொண்ட வாலாங்குளத்தில் வானவேடிக்கை நடத்தியது சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை சூழலுக்கு எதிரான செயல்களில் அரசு சார் நிறுவனங்களே ஈடுபடக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
44
கோவை வான்விளக்கு திருவிழா
கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் சார்பில் வான் விளக்கு திருவிழா மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வ்ருகிறது.