செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா? புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல்!

Published : Apr 27, 2025, 05:50 PM IST

Reshuffle in Tamil Nadu Cabinet : தமிழகத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொதுவெளியில் பெண்கள் குறித்து அவதூறாக பேசி வந்த அமைச்சர் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பொறுப்பேற்க இருக்கும் புதிய அமைச்சர்கள் குறித்து பார்க்கலாம்.

PREV
16
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா? புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல்!

Reshuffle in Tamil Nadu Cabinet : தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்து 4 வருடங்களை எட்டியுள்ளது. இந்த கால கட்டத்தில் தமிழக அமைச்சரைவையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.  கிட்டத்தட்ட 5 முறை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதன் படி அமைச்சரவையில் புதிதாக இடம்பிடித்த உதயநிதி துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

26
Tamil Nadu Excise Minister Senthil Balaji (Photo/ANI)

3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பும், எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தனித்து வெற்றி பெற்ற சேலம் ராஜேந்திரனுக்கு அமைச்சரவை பதவியும் வழங்கப்பட்டது. அதே போல கோவி. செழியன், நாசர் ஆகியோரும் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

36
senthil balaji

சிக்கலில் செந்தில் பாலாஜி

அதே நேரம், அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் நீதிமன்ற உத்தரவால் அமைச்சர் பதவியை இழந்து மீண்டும் தற்போது அமைச்சர்களாக நீடித்து வரும் நிலையில் மீண்டும் தங்கது அமைச்சர் பதவியை இழக்க இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில் தற்போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது

46
senthil balaji

செந்தில் பாலாஜி:

அதன் படி, முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் அடுத்த சில நாட்களில் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு தற்போது உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதன்படி அமைச்சராக தொடர வேண்டுமென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும், ஜாமீனில் வெளியில் இருக்க வேண்டுமானால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலிறுத்தியது. அதோடு 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

56

அப்படி செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யும் நிலையில் புதிய அமைச்சராக யாருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தநிலையில் அதற்கான உத்தேச பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது.

 

ராஜ கண்ணப்பன் - வனத்துறை

முத்துச்சாமி- மதுவிலக்கு ஆயத்தீர்வை

சிவசங்கர்- மின்சாரத்துறை

மனோ தங்கராஜ் - பால் வளத்துறை

இவர்கள் நான்கு பேருக்கு அமைச்சரவை பதவி கொடுக்கப்படுகிறது. இவர்களில் ஏற்கனவே மனோ தங்கராஜ் தவிர அனைவருமே அமைச்சர்கள் தான்.

66

செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதும், முத்துசாமி தான் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை கவனித்துக் கொண்டார். இப்போது அவர் ராஜினாமா செய்ய உள்ள நிலையில் அந்த துறை அவருக்கே கொடுக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதே போன்று மற்றொரு தகவலு வெளியாகியிருக்கிறது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் மற்றும் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பிடிஆர் வசம் மின்சாரம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக ஆளுநர் சென்னை வந்தவுடன் இன்று இரவு அல்லது நாளை பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories