யாரு பெயரும் விடுபடக்கூடாது! ஆசிரியர்கள் விவரங்களை உடனே அனுப்புங்க! ! பள்​ளிக்​கல்​வித்துறை அதிரடி உத்தரவு!

Published : May 25, 2025, 10:43 AM IST

2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31 வரை உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
14
தமிழ்நாட்டில் மொத்த ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 58,000 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5.62 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியில் இருக்கும் போது, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கின்றனர்.

24
பள்​ளிக்​கல்​வித் துறை உத்தரவு

இந்நிலையில் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்க பணிக்காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விபரங்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பள்ளிக்கல்வித் துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார்.

34
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு

இந்த துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31-ம் தேதி வரை உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் எவரின் பெயரும் விடுபடாதவாறு கையொப்பத்துடன் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

44
முதன்மைக் கல்வி அலுவலர்கள்

இதுதவிர மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் அதற்கு முந்தைய மாதத்தில் உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories