தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து எப்போது தப்பிப்போம் என மக்கள் காத்திருந்த நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் நிலையில் . 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுதினம் உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24
ஊட்டியில் வெளுத்து வாங்கும் மழை
இந்தநிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நீலகிரி மற்றும் கோவையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதாவது நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழையும், எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
34
விடுதிக்குள் சுற்றுலா பயணிகள்
உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவினர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நீலியைல நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கனமழை காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுலா செல்லும் பயணிகள் விடுதிகளுக்குள் முடிங்கிக்கிடக்கும் நிலை நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதவிக்கான அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் நாளை (மே 26) மற்றும் மே 27ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் குளிக்கவோ நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவோ வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.