மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல 25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்

Published : Feb 13, 2025, 10:41 AM IST

ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

PREV
14
மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல  25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்
மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல 25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.!

மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மாணவர்கள், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. மாணவர்களின் பசியை போக்க தமிழக அரசு சார்பாக காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச கல்வி, இலவச பேருந்து பாஸ், கல்வி உதவி தொகை என திட்டங்கள் உள்ளது. இந்த நிலையில் தான் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி இறுதி ஆண்டில், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக, பண உறுதி ஆவணம் வழங்கும், உயர் திறன் ஊக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

24
மாணவர்களுக்கு பண உறுதி ஆவணம்

இத்திட்டத்தின் கீழ், 12,000, 15,000, 25,000 ரூபாய் என, மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படவுள்ளது.  இத்திட்டத்தில், கல்லுாரி முதலாம் ஆண்டில் இருந்து அனைத்து ஆண்டுகளிலும், அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பண உறுதி ஆவணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

34
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம்

இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்கப்பட இருப்பதாகவும் அதன் படி  12,000, 15,000, 25,000 ரூபாய் என, மூன்று பிரிவுகளில் வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 

44
விண்ணப்பிக்க அழைப்பு

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://cms.tn.gov.in/cmsmigrated/document/GO/adtwt90ms2024.pdf https://cms.tn.gov.in/cmsmigrated/document/GO/adtwt5ms2025.pdf என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் https://ee.kobotoolbox.org/x/nMU1hMpq என்ற இணைப்பில் 28.02.2025 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மாணாக்கர் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்ட பயனாளியாக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories