Published : Feb 05, 2025, 01:42 PM ISTUpdated : Feb 05, 2025, 01:48 PM IST
தமிழகத்தில் பணிபுரியும் 669 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.3,125 உயர்த்தப்பட்டு, ரூ.15,625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேப்பி நியூஸ்! இவர்களுக்கு ரூ.3,125 ஊதிய உயர்வு! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் தேனி, ஆனைமலை, முதுமலை, விருதுநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை விரட்டுவது, கரடி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை கூண்டுக்குள் பிடித்து வனத்துக்குள் விடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்கள் தான் இந்த பணியில் பணியாற்றி வருகின்றனர்.
24
வேட்டை தடுப்புக் காவலர்கள்
இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் வன காப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 669 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மாதாந்திர தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வனப் பகுதியில் வன விலங்குகள் வேட்டை, அந்நியர்களின் நடமாட்டம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தை ரூ.19,525 உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை ரூ.3,125 அதிகரித்து ரூ.15,625 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 669 வேட்டை தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள். ஏற்கனவே இவர்களுக்கு ஊதிய உயர்வு 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2,500 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.