திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி குறித்த ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட உதவித்தொகையை ஏற்படுத்த முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ரூ.11.37 கோடி நிதி வழங்குகிறார்.
திராவிடம் என்றதும் தற்போதைய அரசியல் சூழலில் அனைவரின் நினைவுக்கும் வருவது பெரியார்தான். அந்தவகையில் மதங்கள் வேறுபட்டிருந்தாலும், மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட சமூகமாகத்தான்,
நம்முடைய தமிழ்ச் சமூகம் விளங்குகிறது! இதற்கு அடித்தளம் போட்டது திராவிட இயக்கம்! மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரைக்கும், இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக வாழும் மக்கள் அனைவரும், பெரும்பான்மையில் சொற்பமான சிலர் விதைக்கும் வெறுப்பு அரசியலுக்கு அஞ்சக் கூடாது;
24
மதச் சார்பின்மையையும் - மத நல்லிணக்கம்
மதச் சார்பின்மையையும் - மத நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் உங்களுக்குத் துணை இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உலக முழுவதும் திராவிட இயக்கத்தை எடுத்து செல்லும் வகையில் அசத்தலான முயற்சியை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்,
34
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வுக்காகவும், திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் முனைவர் பட்ட உதவித்தொகையை ஏற்படுத்த சுமார் 11.37 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உதவித்தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகியதையடுத்து அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள சபரீசன், சமூக நீதி இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலானது. திராவிட இயக்கத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார். தற்போதைய கால கட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். இந்த முனைவர் பட்ட உதவித்தொகை, இந்தியா உட்பட உலகளவிலான மாணவர்களை இலக்காகக் கொண்டது எனவும் சபரீசன் தெரிவித்துள்ளா்.