கொத்து கொத்தாக இளைஞர்களுக்கு வேலை.! 300 கோடி முதலீடு- தமிழக அரசின் அசத்தல் பிளான்

Published : Jun 04, 2025, 02:23 PM ISTUpdated : Jun 04, 2025, 02:35 PM IST

தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. அஜைல் ரோபோட்ஸ் மற்றும் SOL இந்தியா நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன.

PREV
14
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு. 2024-25 ஆம் ஆண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

24
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு

இது, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு, உருவாக்கி, அதிக தமிழ்நாட்டின் எண்ணிக்கையிலான பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

34
அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. இத்திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

44
SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் ஆலை

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம். தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 200 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு (Ar Separation) ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கடந்த 19.07.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து, 175 கோடி ரூபாய் முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும். 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆலைகளும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories