தமிழக அரசுப் பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Government School Teachers: தமி்ழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் இருந்து ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “தமிழக அரசுப் பள்ளிகளில் 13 ஆண்டுகள் கடந்தும் பகுதிநேர ஆசிரியர்கள் தற்போதும் ரூபாய் 12,500 என்ற குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிக நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
24
School Teachers
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி உள்ளிட்ட பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை நம்பி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் உள்ளன.
34
Tiruvallikeni Government School
அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை
மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இன்றைய விலைவாசி உயர்வில் இந்த சொற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு அடிப்படைத் தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியவில்லை என பரிதவிக்கின்றனர். இதில் பெரும்பாலும் 50 வயதை கடந்து விட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், விதைவை பெண்கள், 50 சதவீதம் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஏழை விவசாய குடும்பங்களைச் சேர்ந்த சமுதாயத்தில் கஷ்டப்படுகின்றவர்கள் தான் அதிகம் உள்ளார்கள்.
44
Government School
காலமுறை சம்பளம்
14 ஆண்டு தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே அரசு சலுகைகள் கிடைத்து இவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் உரையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை இந்த பட்ஜெட் தொடரிலேயே 110 விதியின் கீழ் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். என ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.