பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி விவகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. அன்புமணி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விளக்கம் அளிக்க கடைசி வாய்ப்பு
பாமக நிறுவனர் சு. ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மோதல் தற்போது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக அறிவித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து, "எனக்கு உதவியா? கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆகிவிட்டது" என்று குறுக்கிட்டார். இதற்கு ராமதாஸ் "இது என் கட்சி, நான் சொல்வதை கேட்க வேண்டும்; இல்லையென்றால் வெளியேறுங்கள்" என்று பதிலளித்தார்.
25
பாமக போட்டி பொதுக்குழு கூட்டம்
அடுத்த சில மாதங்களிலேயே மீண்டு மோதல் ஏற்பட்டது. ராமதாஸ் தன்னை கட்சித் தலைவராக அறிவித்து, அன்புமணியை "செயல் தலைவர்" என்று அறிவித்தார்.இது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டு, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை சுட்டிக்காட்டினார். அடுத்தாக மே 16ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அழைத்த கூட்டத்தை அன்புமணி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
இதனை தொடர்ந்து ஆவேசம் அடைந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அன்புமணியை அமைச்சராக்கியது என் தவறு; வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் இரு தரப்பும் நிர்வாகிகளை மாற்றி மாறி நீக்கி, கட்சியில் இரண்டு அமைப்புகள் உருவாகின. மாவட்டங்களில் இரு தலைவர்கள், இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
35
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்
இதனையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார்.ராமதாசும் போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். இதனால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியது. அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் எந்த வித தடையும் பிறப்பிக்காத நிலையில் கூட்டம் நடைபெற்றது
அதில் அன்புமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் கூறி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
முதல் முறையாக அனுப்பப்பட்ட விளக்க கடிதத்திற்கு எந்தவித பதிலும் வரவில்லை. இதனையடுத்து நிர்வாக குழு கூடி ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக பரிந்துரை செய்திருந்தது. அதையும் நிர்வாக குழு ஆராய்ந்து இன்னும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவு எடுத்து . 10ஆம் தேதி வரை அன்புமணிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
55
அன்புமணிக்கு ஒரு வார காலம் அவகாசம்
இரண்டாம் கட்ட நோட்டீஸ் விளக்கம் கொடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும் என பாடல் பாடிய ராமதாஸ், இந்த பாடலை எத்தனை நாட்களுக்கு தான் நான் பாடுவது என கேள்வி எழுப்பினார். பதில் அளிக்கவில்லையென்றால் ஒருங்கிணைப்பு குழு, நிர்வாக குழுவின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.