தமிழகத்தில் ஜூலை 3 வரை மழை பெய்யும்! குட் நியூஸ் கொடுத்த வானிலை மையம்!

Published : Jun 25, 2025, 09:11 PM IST

ஜூன் 26 முதல் ஜூலை 3 வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
ஜூலை 3 வரை மழை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாத இறுதி (ஜூன் 26 முதல் ஜூலை 3) நாட்களில் 2-3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24
தென் மாவட்டங்களில் பரவலாக மழை

ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், போடிநாயக்கனூர், கொடைக்கானல், வாடிப்பட்டி, நத்தம், மதுரை, அழகர்கோவில், மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, சிவகங்கை, உசிலம்பட்டி, காளையார்கோவில், காரைக்குடி, அறந்தாங்கி, அரிமளம், புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மிதமான முதல் ஒரு சில இடங்களில் சற்றே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
வட மாவட்டங்களில் லேசான மழை

நாமக்கல், பரமத்தி, கரூர், எடப்பாடி, காரமடை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கெங்கவல்லி, அரியலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை, லால்குடி, தொழுதூர், வேப்பூர், பெண்ணாடம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், திருக்கோவிலூர், மடப்பட்டு, திண்டிவனம், செஞ்சி, ஆற்காடு, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். இந்த இடங்களில் தினமும் மழை எதிர்பார்க்க வேண்டாம்; 2-4 நாட்கள் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

44
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories