Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!

Published : May 10, 2026, 07:52 PM IST

Rahul Gandhi and Vijay: ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகிய இருவரும் ஒரு சினிமா பாணியிலான அரசியல் களத்தில் இணைந்திருப்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தமிழக காங்கிரஸ் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. 

PREV
13
தமிழக முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று ஜோசப் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேரில் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆதரவளித்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் தலைவர்களும் அவருடன் வந்திருந்தனர்.

23
ராகுல் விருப்பத்தை தடுத்த சோனியா

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்பினார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுலுடன் நெருக்கமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரும் இதில் உறுதியாக இருந்தனர். ஆனால் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் ராகுலிடம் பேசி திமுக கூட்டணியில் தொடர வைத்தனர். இப்போது தவெக வெற்றி பெற்று விட்டதால் காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து விட்டு கூடட்ணியும் வைத்து விட்டது.

33
காங்கிரஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்து மெகா வெற்றியை அறுவடை செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இதனால் விஜய் பதவியேற்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்ததை காங்கிரஸ்காரர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஒரு சினிமா பாணியிலான அரசியல் களத்தில் இணைந்திருப்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தமிழக காங்கிரஸ் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

அதாவது விஜய் நடித்த GOATபடத்தின் பின்னணி இசையை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. விஜய், ராகுல் காந்தி இருவரும் மாஸாக நடந்து வந்து கைகோர்ப்பது போல் வீடியோ உருவாகியுள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் மற்றும் தவெ தொண்டர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories